ஆட்டோமொபைல்

டாடா மோட்டார்ஸ் தயாரிப்பில் இந்தியாவின் பாதுகாப்பான கார்

Published On 2019-05-01 05:19 GMT   |   Update On 2019-05-01 05:19 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ரோஸ் கார் இந்தியாவின் பாதுகாப்பான காராக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #TataMotors
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா அல்ட்ரோஸ் காரை சமீபத்தில் நடந்து முடிந்த ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது. அல்ட்ரோஸ் கார் டாடா நிறுவனத்தின் பிரீமியம் மாடலாக உருவாகியிருக்கிறது.

இத்துடன் புதிய அல்ட்ரோஸ் கார் டாடாவின் ஆல்ஃபா (ALFA) தளத்தில் உருவாகியிருக்கும் முதல் மாடலாக இருக்கிறது. மேலும் புதிய கார் NCAP விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெறலாம் என்றும் டாடா மோட்டார்ஸ் நம்புகிறது. தற்சமயம் வரை டாடா நெக்சான் மட்டுமே ஐந்து நட்சத்திர குறியீடு பெற்ற ஒற்றை டாடா வாகனமாக இருக்கிறது.

அதிநவீன வடிவமைப்பு மற்றும் உறுதியான உற்பத்தி தரம் உள்ளிட்டவை அல்ட்ராஸ் பாதுகாப்பிற்கு பக்கபலமாக இருக்கும் என்றும் இது ஹேட்ச்பேக் பிரிவில் ஐந்து நட்சத்திர குறியீட்டை பெறும் என கூறப்படுகிறது.


இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில் டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது மாருதி சுசுகி பலேனோ, ஹோன்டா ஜாஸ் மற்றும் ஹூன்டாய் எலைட் i20 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

டாடா அல்ட்ரோஸ் வெளிப்புற வடிவமைப்பு டாடா 45X கான்செப்ட் காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஃபுளோட்டிங் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அதிகளவு கேபின் வசதி கொண்டிருக்கிறது. புதிய அல்ட்ரோஸ் காரின் என்ஜின் வேரியண்ட்கள் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை.

எனினும், இதில் மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் டாடா டியாகோ காரில் இந்த என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் யூனிட்களை பொருத்தவரை 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News