இந்தியா
எம்எல்ஏ நஹித் ஹசன்

உத்தர பிரதேச தேர்தல்- முதல் நாளில் முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்த எம்எல்ஏ

Published On 2022-01-14 16:25 GMT   |   Update On 2022-01-14 16:25 GMT
உத்தர பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளிலும் 2.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று முதல் நபராக சமாஜ்வாடி கட்சியின் கைரானா தொகுதி எம்எல்ஏ நஹித் ஹசன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21ம் தேதி. 24ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை திரும்ப பெறுவதற்கு ஜனவரி 27ம் தேதி கடைசி நாள் ஆகும். 

முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளிலும் 2.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலுக்காக 25,849 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
Tags:    

Similar News