ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிரெட்டா

முன்பதிவில் 20 ஆயிரம் யூனிட்களை கடந்த புதிய ஹூண்டாய் கிரெட்டா

Published On 2020-05-02 09:46 GMT   |   Update On 2020-05-02 09:46 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை கிரெட்டா கார் முன்பதிவில் 20 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறது.



ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமுறை கிரெட்டா காரை வாங்க இந்தியாவில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து இருக்கின்றனர். இரண்டாம் தலைமுறை கிரெட்டா காரை வாங்க 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்பே புதிய ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்க 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதை தொடர்ந்து தற்சமயம் கிரெட்டா முன்பதிவு 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. ஊரடங்கு காலக்கட்டத்திலும் கிரெட்டா காருக்கு இத்தனை வரவேற்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என ஹூண்டாய் மோட்டார் நிறுவன விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு தலைவர் தருன் கார்க் தெரிவித்தார். 



கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் புதிய தலைமுறை கிரெட்டா காருக்கான விநியோகம் துவங்கும் என ஹூண்டாய் நிறுவனம் உறுதியளித்து இருக்கிறது. கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் விநியோகம் துவங்கும் என தருன் கார்க் தெரிவித்து இருக்கிறார். இதுவரை இந்தியா முழுக்க பல்வேறு விற்பனையாளர்களுக்கு 6703 கிரெட்டா யூனிட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
Tags:    

Similar News