செய்திகள்
கோப்புபடம்

அரசு நிதி உதவி பள்ளிகளில் 34 ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ப்பு - தனியார் பள்ளிகளை விட சேர்க்கை அதிகரிப்பு

Published On 2020-08-31 09:11 GMT   |   Update On 2020-08-31 09:11 GMT
ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 34 ஆயிரம் மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டனர். தனியார் பள்ளிக்கூடங்களை விட அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.
ஈரோடு:

தமிழ்நாடு முழுவதும் கடந்த 17-ந்தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தொடக்கத்தில் ஓரிரு நாட்கள் தனியார் பள்ளிக்கூடங்களில் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. ஆனால் தற்போது அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது.

குறிப்பாக கடந்த 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலான நாட்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. 27-ந் தேதிவரை அரசு மற்றும் மாநகராட்சி, ஒன்றிய பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பில் 5 ஆயிரத்து 660 மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 2-ம் வகுப்பில் 408 பேர், 3-ம் வகுப்பில் 381 பேர், 4-ம் வகுப்பில் 394 பேர், 5-ம் வகுப்பில் 300 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

6-ம் வகுப்பில் 631 பேர் சேர்ந்து இருக்கிறார்கள். 7-ம் வகுப்பில் 46 பேரும், 8-ம் வகுப்பில் 39 பேரும் சேர்ந்து இருக்கிறார்கள். மொத்தமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அரசு பள்ளிக்கூடங்களில் 7 ஆயிரத்து 859 மாணவ -மாணவிகள் சேர்ந்து உள்ளனர். இதுபோல் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் 6-ம் வகுப்பில் 6 ஆயிரத்து 859 மாணவ -மாணவிகள் சேர்ந்து இருக்கிறார்கள்.

7-ம் வகுப்பில் 303 பேரும், 8-ம் வகுப்பில் 298 பேரும், 10-ம் வகுப்பில் 95 பேரும் புதிதாக சேர்ந்து இருக்கிறார்கள். 11-ம் வகுப்பில் புதிதாக 8 ஆயிரத்து 730 பேர் சேர்ந்து உள்ளனர். 12-ம் வகுப்பில் 18 பேர் சேர்ந்து இருக்கிறார்கள். ஆக மொத்தம் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 27 ஆயிரத்து 448 மாணவ-மாணவிகள் சேர்ந்து உள்ளனர்.

நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும் வழக்கத்தை விட அதிகமான மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கிறார்கள். நிதி உதவி பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பில் 949 மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். 2-ம் வகுப்பில் 45 பேர், 3-ம் வகுப்பில் 47 பேர், 4-ம் வகுப்பில் 42 பேர், 5-ம் வகுப்பில் 55 பேர், 6-ம் வகுப்பில் 90 பேர் என புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பில் 2 ஆயிரத்து 235 மாணவ-மாணவிகள், 7-ம் வகுப்பில் 61 பேர், 8-ம் வகுப்பில் 53 பேர், 9-ம் வகுப்பில் 588 பேர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். 11-ம் வகுப்பில் 5 ஆயிரத்து 931 பேர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 7 ஆயிரத்து 160 மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாக 27-ந் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 34 ஆயிரத்து 608 மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். தனியார் பள்ளிக்கூட சேர்க்கையை ஒப்பிடும்போது இது அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 11-ம் வகுப்பில் தனியார் பள்ளிக்கூடங்களை விட மிக அதிக அளவில் மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அரசு பள்ளிக்கூடங்களை நோக்கி மாணவ -மாணவிகள் அதிகம் வந்து இருக்கிறார்கள்.

Tags:    

Similar News