ஆன்மிகம்
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா

Published On 2020-09-03 05:10 GMT   |   Update On 2020-09-03 05:10 GMT
தற்போது ஊரடங்கில் அரசு சில தளர்வுகளை அறிவித்து உள்ளதால் சேஷபுரீஸ்வரர் கோவில் ராகு-கேது பெயர்ச்சி வழிபாட்டில் குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில் தென்காளகஸ்தி என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ராகுபகவான், கேதுபகவான் ஆகிய இருவரும் ஒரே சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இதனால் சேஷபுரீஸ்வரர் கோவில் ராகு-கேது தலம் என அழைக்கப்படுகிறது.

ராகுதோஷம், கேதுதோஷம், நாகதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்தால் தோஷங்கள் விலகி திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். நேற்று முன்தினம் மதியம் ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர். இதை முன்னிட்டு ராகு-கேதுவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து தீபாராதனை காட்டப்பட்டது.

தற்போது ஊரடங்கில் அரசு சில தளர்வுகளை அறிவித்து உள்ளதால் சேஷபுரீஸ்வரர் கோவில் ராகு-கேது பெயர்ச்சி வழிபாட்டில் குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை கோவில் சிவாச்சாரியார்கள் பிரேம், கவுரி சங்கர் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தக்கார் அமரநாதன், மேலாளர் வள்ளிகந்தன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News