செய்திகள்
தங்கம்

தங்கம் விலை நிலவரம்

Published On 2021-04-08 06:48 GMT   |   Update On 2021-04-08 06:48 GMT
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.34,760-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.4,345 ஆக உள்ளது.
சென்னை:

தங்கம் விலை கடந்த மாதம் ஏற்ற-இறக்கத்துடன் இருந்தது. இதனால் சில தினங்களுக்கு முன்பு தங்கம் பவுன் ரூ.34 ஆயிரத்துக்குள் வந்தது.

பின்னர் விலை உயர்ந்ததால் கடந்த 2-ந்தேதி மீண்டும் தங்கம் பவுன் ரூ.34 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.608 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.34,672 ஆகவும், ஒரு கிராம் ரூ.4,334 ஆகவும் இருந்தது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 88 உயர்ந்து ரூ.34,760-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.4,345 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.71,300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்கிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதாலும், கொரோனா 2-வது அலை பரவி வருவதாலும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
Tags:    

Similar News