செய்திகள்
கோப்புபடம்.

முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைய பொதுமக்கள் ஆர்வம்

Published On 2021-09-09 07:25 GMT   |   Update On 2021-09-09 07:25 GMT
ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் என்பதால் எளியவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
திருப்பூர்:

கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டது.

அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்தபோது கொரோனாவுக்கு இலவச சிகிச்சை கிடைக்கும் முதல் -அமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைய மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர்.

இத்திட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் என்பதால் எளியவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலமாக ஆயிரக்கணக்கானோர் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதன் பின்னே முதலமைச்சர் காப்பீடு திட்டம் குறித்த பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தினரும், தாங்களாக முன்வந்து காப்பீடு திட்டத்தில் இணைந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 3,437 குடும்பத்தினர் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News