தமிழ்நாடு
மணிமுத்தாறு அருவி

அகஸ்தியர்-மணிமுத்தாறு அருவிகளில் 2 நாட்கள் பொதுமக்களுக்கு தடை

Published On 2022-01-13 09:02 GMT   |   Update On 2022-01-13 09:02 GMT
நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளிலும் 2 நாட்கள் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளை முதல் வருகிற 18-ந்தேதி வரை வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமானோர் குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள் என்பதால் அதற்கும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (15-ந்தேதி) பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா, ஒமைக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொங்கல் பண்டிகை விடுமுறையின்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News