ஆன்மிகம்
சூரிய வழிபாடு

காரிய வெற்றிக்கு சூரிய வழிபாடு

Published On 2020-08-21 06:34 GMT   |   Update On 2020-08-21 06:34 GMT
காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். வாழ்வில் எல்லா நலன்களும் கைகூடும்.
நவகிரகங்களில் முதலில் இருப்பவர் சூரியன். அதனால், தினமும் காலையில் எழுந்ததும் சூரியனை பார்த்து வழிபடுவது நன்மையைக் கொண்டு வரும்.

நவக்கிரகங்களில் ‘ராஜகிரகம்’ என்று அழைக்கப்படுவது சூரியன். சூரியனுடைய அருளைப் பெற விரும்புபவர்கள், சூரியதிசை, சூரிய புத்தி நடப்பவர்கள் சூரிய வழிபாட்டை தினமும் மேற்கொள்வதோடு, ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரை நேரத்தில் கோதுமை தானமும், ஏழு குதிரைகளுக்கும் ஏழு கைப்பிடி கொள்ளும் தானம் கொடுத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் வசந்தம் உருவாகும்.

சூரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும் புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். வாழ்வில் எல்லா நலன்களும் கைகூடும்.
Tags:    

Similar News