செய்திகள்
ராகுல் காந்தி

பா.ஜ.க.வை வீழ்த்த தீவிர பிரசாரம் செய்யுங்கள்- ராகுல் காந்தி உத்தரவு

Published On 2021-09-25 09:29 GMT   |   Update On 2021-09-25 12:22 GMT
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டமன்றத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களை பிடித்தது. பா.ஜனதா 13 இடங்களை பிடித்தது.

பானாஜி:

கோவா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை கட்சிகள் தற்போதே தொடங்கி விட்டன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கோவா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.

இதில் காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மூத்த தேர்தல் பார்வையாளர் ப.சிதம்பரம், பொதுச் செயலாளர் கே.வேணுகோபால், கிரீஷ் சோடேங்கர், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் திகம்பர் காமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கோவாவில் தீவிர பிரசாரத்தை தொடங்கி பா.ஜனதாவின் தோல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

எங்களது தலைவர் ராகுல் காந்தி கோவா மாநில காங்கிரஸ் கட்சி கோவா மக்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க கட்சி தலைவர்கள் தீவிரமான பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

எங்களது அனுதாபிகள் ஆதரவாளர்களை நாங்கள் தேர்தல் வெற்றியை நோக்கி அழைத்து செல்வோம். நாங்கள் பா.ஜனதாவை கண்டிப்பாக தோற்கடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டமன்றத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களை பிடித்தது. பா.ஜனதா 13 இடங்களை பிடித்தது. சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Tags:    

Similar News