ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்

மண்டைக்காடு கோவிலில் பூஜை நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2021-04-10 08:01 GMT   |   Update On 2021-04-10 08:01 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒரே நேரத்தில் 20 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. பூஜை நேரத்தில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் இருந்து கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து கோவில்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒரே நேரத்தில் 20 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. பூஜை நேரத்தில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருமண நிகழ்ச்சிக்கு 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை. கோவில் மண்டபத்தில் நடக்கும் திருமணத்திற்கு 50 பேருக்கு மேல் அனுமதி மறுக்கப்படுகிறது. அர்ச்சனை, வழிபாடுகள் நடத்த அனுமதி இல்லை. கோவிலுக்குள் செல்லும் போது முக கவசம் அணிந்து, கைகளை கழுவி செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News