செய்திகள்
கோப்புப்படம்

விசா பிரச்சினையால் பாகிஸ்தானில் சிக்கிய இந்து பெண் இந்தியா திரும்பினார்

Published On 2020-11-25 23:03 GMT   |   Update On 2020-11-25 23:03 GMT
விசா பிரச்சினையால் பாகிஸ்தானில் சிக்கிய இந்து பெண் ஜந்தா மாலி 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பி தனது குடும்பத்துடன் இணைந்தார்.
ஜோத்பூர்:

பாகிஸ்தானை சேர்ந்த இந்து பெண்ணான ஜந்தா மாலி என்பவர் நீண்ட கால விசாவில் பல ஆண்டுகளாக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

ஜந்தா மாலி, இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்திருக்கும் நிலையில் பாகிஸ்தானில் இருக்கும் தனது தாயாரை பார்ப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கணவர் மற்றும் குழந்தையுடன் அங்கு சென்றார். இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் இவர்கள் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் ஜந்தா மாலியின் கணவர் மற்றும் குழந்தை இந்திய பிரஜைகள் என்பதால் அவர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் இந்தியா திரும்பினார்.

அதே சமயம் ஜந்தா மாலியின் விசா காலம் முடிவடைந்துவிட்டதால் அவர் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து ஜந்தா மாலியின் விசா காலம் நீட்டிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 10 மாதங்களுக்குப் பிறகு ஜந்தா மாலி நேற்று முன்தினம் இந்தியா திரும்பி தனது குடும்பத்துடன் இணைந்தார்.
Tags:    

Similar News