செய்திகள்
இந்திய பணம்

10 சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் 50 சதவீத சொத்துக்கள்

Published On 2021-09-15 10:25 GMT   |   Update On 2021-09-15 10:25 GMT
நாட்டில் கிராம பகுதிகளில் ஒட்டுமொத்தமாக உள்ள ரூ.238.1 லட்சம் கோடி சொத்துக்களில் 10 சதவீத பணக்காரர்களிடம் ரூ.132.5 லட்சம் கோடி சொத்துக்கள் இருக்கின்றன.
புதுடெல்லி:

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நாடு முழுவதும் உள்ள சொத்துக்கள் யாரிடம் அதிகமாக உள்ளன என்பது தொடர்பாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

அதில் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சொத்தில் 50 சதவீதம், 10 சதவீதம் பணக்காரர்களிடம் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது நகர பகுதிகளில் 55.7 சதவீத சொத்துக்கள் 10 சதவீதம் பணக்காரர்களிடமும், கிராமப்பகுதிகளில் 50.8 சதவீத சொத்துக்கள் 10 சதவீத பணக்காரர்களிடமும் இருக்கின்றன.

மிகவும் கீழ்நிலையில் உள்ள ஏழைகளிடம் ஒட்டுமொத்த சொத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கின்றன.

அதாவது நிலம், வாகனங்கள், கட்டிடங்கள், எந்திரங்கள், விவசாய சாதனங்கள், கால்நடைகள், பங்குச்சந்தை முதலீடுகள், வங்கி முதலீடுகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்து சொத்துப்பட்டியலை உருவாக்கி இருக்கிறார்கள்.

டெல்லியில் நகர பகுதிகளில் 10 சதவீத பணக்காரர்களிடம் 67.9 சதவீத சொத்துக்கள் உள்ளன. 50 சதவீத ஏழைகளிடம் 3.5 சதவீத சொத்துக்கள் மட்டுமே இருக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் நகர பகுதிகளில் 10 சதவீத பணக்காரர்களிடம் 61.4 சதவீத சொத்துக்களும், தெலுங்கானாவில் 58.7 சதவீத சொத்துக்களும், கர்நாடகாவில் 56.5 சதவீத சொத்துக்களும், இமாச்சலபிரதேசத்தில் 56.4 சதவீத சொத்துக்களும், சத்தீஸ்கரில் 46.3 சதவீத சொத்துக்களும், மேற்குவங்காளத்தில் 45.4 சதவீத சொத்துக்களும், பஞ்சாப்பில் 44.3 சதவீத சொத்துக்களும், உத்தரகாண்டில் 42.7 சதவீத சொத்துக்களும், காஷ்மீரில் 36 சதவீத சொத்துக்களும் 10 சதவீத பணக்காரர்களிடம் இருக்கின்றன.

அதேபோல 50 சதவீத ஏழைகளிடம் மகாராஷ்டிரத்தில் 5 சதவீத சொத்துக்களும், தெலுங்கானாவில் 4.1 சதவீத சொத்துக்களும், கர்நாடகாவில் 3.7 சதவீத சொத்துக்களும், இமாச்சலபிரதேசத்தில் 3.6 சதவீத சொத்துக்களும், சத்தீஸ்கரில் 12.6 சதவீத சொத்துக்களும், மேற்குவங்காளத்தில் 7.4 சதவீத சொத்துக்களும், பஞ்சாப்பில் 10 சதவீத சொத்துக்களும், உத்தரகாண்டில் 5.3 சதவீத சொத்துக்களும், காஷ்மீரில் 14.9 சதவீத சொத்துக்களும் உள்ளன.

இதேபோல டெல்லியில் கிராமப் பகுதிகளில் 10 சதவீத பணக்காரர்களிடம் 80.8 சதவீத சொத்துக்கள் உள்ளன. பஞ்சாப்பில் 65.1 சதவீத சொத்துக்களும், உத்தரகாண்டில் 57 சதவீத சொத்துக்களும், மத்திய பிரதேசத்தில் 51.9 சதவீத சொத்துக்களும், அரியானாவில் 50.4 சதவீத சொத்துக்களும், ஒடிசாவில் 40.4 சதவீத சொத்துக்களும், அசாமில் 39.7 சதவீத சொத்துக்களும், தெலுங்கானாவில் 38.5 சதவீத சொத்துக்களும், ஜார்கண்டில் 37.8 சதவீத சொத்துக்களும், காஷ்மீரில் 32.1 சதவீத சொத்துக்களும் 10 சதவீத பணக்காரர்களிடம் இருக்கின்றன.

இதேபோல 50 சதவீத ஏழைகளிடம் டெல்லியில் 2.1 சதவீத சொத்துக்களும், பஞ்சாப்பில் 5.2 சதவீத சொத்துக்களும், உத்தரகாண்டில் 8.2 சதவீத சொத்துக்களும், மத்திய பிரதேசத்தில் 10.8 சதவீத சொத்துக்களும், அரியானாவில் 7.5 சதவீத சொத்துக்களும், ஒடிசாவில் 14.4 சதவீத சொத்துக்களும், அசாமில் 14.5 சதவீத சொத்துக்களும், தெலுங்கானாவில் 14.6 சதவீத சொத்துக்களும், ஜார்கண்டில் 17.7 சதவீத சொத்துக்களும், காஷ்மீரில் 18 சதவீத சொத்துக்களும் 50 சதவீத ஏழைகளிடம் இருக்கின்றன.

நாட்டில் கிராம பகுதிகளில் ஒட்டுமொத்தமாக உள்ள ரூ.238.1 லட்சம் கோடி சொத்துக்களில் 10 சதவீத பணக்காரர்களிடம் ரூ.132.5 லட்சம் கோடி சொத்துக்கள் இருக்கின்றன.


Tags:    

Similar News