ஆன்மிகம்
ஜோதிடம்

உத்தம கிரக யோகம்

Published On 2019-08-02 06:47 GMT   |   Update On 2019-08-02 06:47 GMT
ஜனன ஜாதகத்தில் இந்த யோகம் கொண்டவர்களுக்கு வீடு, மனை, பூமி போன்ற ஸ்திர சொத்துக்கள் சேர்க்கை அமைவது உறுதி என்று ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடு, மனை, நிலம், பூமி ஆகிய ஸ்திரமான, அசையா சொத்துகளை வாங்கும் யோகம் ஜாதக ரீதியாக அனைவருக்கும் அமைந்திருப்பதில்லை. ஒரு சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு, வாசல், நிலபுலன்கள் ஆகிய சொத்துக்கள் கிடைத்து இருப்பதுடன், அவற்றை பேரன், பேத்தி ஆகிய சந்ததிகளுக்கு சேர்த்து வைக்கக்கூடிய அமைப்பும் ஜாதக ரீதியாக அமைந்திருக்கும். அவ்வாறு அமையப்பெற்ற யோகமானது உத்தம கிரக யோகம் என்று ஜோதிட ரீதியாக சொல்லப்படும்.

அதாவது, ஒருவரது பிறப்பு ஜாதக ரீதியாக லக்னத்திலிருந்து நான்காம் வீட்டு அதிபதியாக உள்ள கிரகம், 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் அல்லது 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்திருக்க வேண்டும். மேலும், அந்த கிரகம் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சுபக்கிரகங்களுடன் இணைந்து அமர்ந்திருப்பதும் அவசியம். அவ்வாறு அமைந்திருப்பது உத்தம கிரக யோகம் ஆகும்.

ஜனன ஜாதகத்தில் இந்த யோகம் கொண்டவர்களுக்கு வீடு, மனை, பூமி போன்ற ஸ்திர சொத்துக்கள் சேர்க்கை அமைவது உறுதி என்று ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சுபக்கிரக சேர்க்கை பெற்ற அந்த நான்காம் வீட்டு அதிபதிக்கு குருவின் பார்வை கிடைக்கும் பட்சத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு, மனைகளுக்கு சொந்தக்காரராக அவர் வாழ்வார். ஜோதிட வழக்கப்படி, இந்த யோக அமைப்பில் லக்ன அசுபர்கள் தொடர்பு பெறும் நிலையில் சுப பலன்கள் குறைந்து விடக்கூடும் என்றும் ஜோதிட நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.c
Tags:    

Similar News