செய்திகள்
அமைச்சர்கள் பதவியேற்பு

மம்தா அமைச்சரவையில் 43 பேர்... ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர்

Published On 2021-05-10 05:55 GMT   |   Update On 2021-05-10 05:55 GMT
மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஜக்தீப் தங்கார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 5ம் தேதி மம்தா நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. 



அப்போது, அமைச்சரவையில் இடம்பெறும் 43 பேர் பதவியேற்றனர். முன்னாள் மந்திரி அமித் மித்ரா காணொளி வாயிலாக பதவியேற்றார். அனைவருக்கும் ஆளுநர் ஜக்தீப் தங்கார் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மம்தா அமைச்சரவையில் பல்வேறு புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News