தொழில்நுட்பம்
ஐபோன் 12

போதுமான வரவேற்பு இல்லை - ஐபோன் மாடல் உற்பத்தியை குறைக்கும் ஆப்பிள்?

Published On 2021-03-11 11:39 GMT   |   Update On 2021-03-11 11:39 GMT
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல் உற்பத்தியை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மினி மாடலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒட்டுமொத்த ஐபோன் 12 மினி உற்பத்தியை 20 சதவீதம் வரை குறைக்க ஆப்பிள் திட்டமிடுகிறது என கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 7.5 கோடி ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படலாம். இதில் புதிய ஐபோன் 12 சீரிஸ் மற்றும் சில பழைய மாடல்களும் இடம்பெறுகிறது. முந்தைய கணிப்புகளின் படி 9.6 கோடி யூனிட்கள் உற்பத்தி செய்யப்படலாம் என கூறப்பட்டது. 



அமெரிக்காவில் புதிய ஐபோன் 12 சீரிஸ் முந்தைய ஐபோன் 11 சீரிசை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. ஐபோன் 12 மாடல் அதிக யூனிட்களும், ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் உள்ளிட்டவை கடந்த ஆண்டு ப்ரோ வேரியண்ட்களை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. 

2021 முதல் காலாண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 11,140 கோடி டாலர்களை வருவாயாக ஈட்டி உள்ளது. ஐபோன் உற்பத்தியை குறைப்பதோடு, பபுதிய மேக்புக் மாடல்களின் உற்பத்தியை மே அல்லது ஜூன் மாத வாக்கில் துவங்க ஆப்பிள் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News