செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா 2-வது அலையில் 4,719 சிறுவர்கள் பாதிப்பு

Published On 2021-06-10 11:28 GMT   |   Update On 2021-06-10 11:28 GMT
கொரோனா 3-வது அலையில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவையில் கொரோனா 2-வது அலையில் அதிகளவு சிறுவர்கள் பாதிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீடுகளில் பெரியவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று வீட்டில் உள்ள குழந்தைகள், சிறுவர்களுக்கும் பரவியது.

கடந்த ஜனவரி முதல் ஜூன் 6-ந் தேதி வரை 6 மாத காலத்தில் 12 வயதுக்குட்பட்ட 2 ஆயிரத்து 353 சிறுவர்களுக்கும், 12 வயது முதல் 17 வயது வரை உள்ள 2 ஆயிரத்து 366 சிறுவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கடந்த 6 மாதத்தில் 17 வயதுக்குட்பட்ட 4 ஆயிரத்து 719 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் பெரும்பாலான சிறுவர்கள் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.

இப்போது கொரோனா 3-வது அலையில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ராஜீவ்காந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News