செய்திகள்
கோப்புப்படம்

வீடு கட்டும் திட்டம்-மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டுகோள்

Published On 2021-06-14 07:25 GMT   |   Update On 2021-06-14 10:42 GMT
தமிழக அரசு கூரை செலவுக்காக கூடுதலாக ரூ.25 ஆயிரம் வழங்குகிறது.
திருப்பூர்:

மத்திய மாநில அரசுகள் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சொந்த இடம் உள்ளவர்கள் 400 சதுர அடி பரப்பில் கான்கிரீட் வீடு கட்ட தலா ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு கூரை செலவுக்காக கூடுதலாக ரூ.25 ஆயிரம் வழங்குகிறது.தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளியாக இருந்தால் கழிப்பறை கட்டவும் ரூ.18 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. கட்டுமான பொருட்கள் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் வீடு கட்டும் திட்டத்தில் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து திருப்பூர் பயனாளிகள் கூறுகையில், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டங்களுக்கு மானியம் ரூ.2.10 லட்சம் என்பதை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்.கொரோனா ஊரடங்கால் பாதித்த பணிகளுக்கு அரசு மானியத்துடன் வங்கிகளில் ரூ.2லட்சம் வரை கடன் வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News