செய்திகள்
இங்கிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்டில் விளையாடுகிறது பாகிஸ்தான்

Published On 2019-08-21 11:27 GMT   |   Update On 2019-08-21 11:27 GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தான் இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. முதன்முதலா ஆஷஸ் தொடர் இதன்கீழ் நடைபெற்று வருகிறது. இலங்கை - நியூசிலாந்து அணிகளும் இரண்டு டெஸ்டில் விளையாடி வருகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்கிறது. ஜூலை 30-ந்தேதி டெஸ்ட் தொடங்குகிறது. அத்துடன் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்திலும், 2-வது டெஸ்ட் மான்செஸ்டரிலும், 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியிலும நடக்கிறது. டி20 போட்டிகள் ஆகஸ்ட் 29, 31 மற்றும் செப்டம்பர் 2-ந்தேதிகளில் நடக்கிறது.

2022-ல் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு சொந்த மைதானததில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
Tags:    

Similar News