ஆன்மிகம்
வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மன்

வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-05-10 05:11 GMT   |   Update On 2021-05-10 05:11 GMT
வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ளது நாட்டு மடம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுமட்டுமின்றி தினமும் பூைஜகள் நடைபெற்று வருகிறது.

மேலும் ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். இந்த நிலையில் சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையொட்டி நாட்டு மடம் மாரியம்மன்னுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

பின்னர் அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.
Tags:    

Similar News