செய்திகள்
வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியை பார்வையிட்ட விஜய் வசந்த் எம்.பி.

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் வசந்த் எம்.பி.

Published On 2021-10-17 12:43 GMT   |   Update On 2021-10-17 12:43 GMT
அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பலத்த சேதங்கங்களை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு1, சிற்றாறு 2 உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் துவங்கியது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து படிப்படியாக உபரி நீரை திறந்துவிட்டது. 

அதற்கு முன்னதாக தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அரசு பள்ளிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

தொடர்ந்து அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பலத்த சேதங்கங்களை ஏற்படுத்தியது. 



இந்நிலையில்  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் - விரிவிளை, முன்சிறை, மங்காடு, பார்த்திபபுரம்,குழித்துறை வைக்கல்லூர், பரக்காணி, பள்ளிக்கல் உட்பட மேலும் பல பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கவும்  கேட்டுக்கொண்டார். அவருடன் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News