செய்திகள்

ஆட்சியைப் தக்கவைக்குமா ஆளுங்கட்சிகள்? மேகாலயாவில் காங்., திரிபுராவில் இடதுசாரி முன்னேற்றம்

Published On 2018-03-03 04:48 GMT   |   Update On 2018-03-03 04:48 GMT
மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியும், திரிபுராவில் இடதுசாரி கூட்டணியும் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் ஆட்சியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Meghalayaassemblyelection #Congress
புதுடெல்லி:

தலா 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மாநிலங்களில் ஆட்சியமைக்க 31 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

திரிபுராவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அடுத்த இடத்தில் பா.ஜ.க. நெருங்கி வருகிறது. 10 மணி நிலவரப்படி இடதுசாரி கூட்டணி 31 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணி 27 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது.

மேகாலயாவைப் பொருத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சி துவக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 11 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தது. பா.ஜ.க. 6 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 14 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன.



நாகாலாந்து மாநிலத்தைப் பொருத்தவரை, துவக்கத்தில் என்.டி.பி.பி., பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் நாகா மக்கள் முன்னணி கூட்டணி பா.ஜ.க. கூட்டணியை முந்தியது. 10 மணி நிலவரப்படி நாகா மக்கள் முன்னணி கூட்டணி 29 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணி 26 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன.

இந்த கள நிலவரம் அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவில் மாறும். #Meghalayaassemblyelection #Congress #tamilnews
Tags:    

Similar News