ஆன்மிகம்
சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்ட காட்சி.

நாகூர் அருகே புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் திருப்பலி

Published On 2020-09-07 03:52 GMT   |   Update On 2020-09-07 03:52 GMT
புனித பாத்திமா அன்னை ஆலய பங்கு தந்தை ஜெர்லின் கார்டர் தலைமையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
நாகை அருகே நாகூர் மாதா கோவில் தெருவில் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. கடந்த 5 மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் ஆணையின்படியும், தஞ்சை மறை மாவட்ட ஆயரின் அறிவுறுத்தல் படியும், நாகூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் மக்களோடு திருப்பலி ஏதும் நடைபெறாமல் இருந்து வந்தது.

தற்போது தமிழக அரசு தளர்வுகள் கட்டுப்பாட்டுடன் கூடிய வழிமுறைகளை பின்பற்றியும், தஞ்சை ஆயர் ஆலோசனைப்படியும் நேற்று புனித பாத்திமா அன்னை ஆலய பங்கு தந்தை ஜெர்லின் கார்டர் தலைமையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

கிருமி நாசினி, முக கவசம், ஆலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு தந்தையோடு இணைந்து நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News