வழிபாடு
திருமண் காப்பின் விளக்கம்

திருமண் காப்பின் விளக்கம்

Published On 2021-12-09 08:33 GMT   |   Update On 2021-12-09 08:33 GMT
திருநாராயணபுரத்தில் கிடைக்கும் ஒரு வகை வெள்ளை மண்ணில் செய்யப்படுவதே நாமக்கட்டியாகும்,. இதனை நாமம் இட்டுக் கொள்வதே திருமண் காப்பு ஆகும்.
வைணவர்கள் தங்களுடைய நெற்றியில் திருமண் எனப்படும் நாமக்கட்டியால் நாமம் இட்டுக் கொள்வார்கள். திருநாராயணபுரத்தில் கிடைக்கும் ஒரு வகை வெள்ளை மண்ணில் செய்யப்படுவதே நாமக்கட்டியாகும்,. இதனை நாமம் இட்டுக் கொள்வதே திருமண் காப்பு ஆகும். பரமனின் பாதார விந்தமே உயிருக்குக் கதி என்பதை உணர்த்தும் வகையில் திருவடி போன்று இது இடப்படுகிறது.

இரண்டு வெள்ளை கோடுகளும், நடுவில் சிவப்பு கோடும் அந்த நாமத்தில் இடம் பெற்று இருக்கும். இதில் வெள்ளை கோடுகள் திருமாலை குறிக்கும், நடுவில் இருக்கும் சிவப்பு லட்சுமியை குறிக்கும். நெற்றிக்கு நாமம் அணிவதால் அவர்கள் இருவரின் அருளும் நமக்குக் கிடைக்கும். லட்சுமி ஒரு போதும் திருமாலை பிரியமாட்டார். அதனால் வெள்ளை கோடுகளுக்கு இடையே சிவப்பு செந்நிற கோட்டை போடுகிறார்கள்.
Tags:    

Similar News