ஆட்டோமொபைல்

இந்தியாவில் மஹேந்திரா பொலேரோ புதிய மைல்கல்

Published On 2018-04-11 10:24 GMT   |   Update On 2018-04-11 10:24 GMT
மஹேந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் பொலேரோ விற்பனையில் புதிய மைல்கல் எட்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் பொலேரோ மாடலை அறிமுகம் செய்தது முதல் இதுவரை சுமார் பத்து லட்சம் யூனிட்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி டாப் 10 பயணாளர் வாகனங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் பொலேரோ விற்பனை 23% அளவு வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. அந்த வகையில் பொலேரோ அந்நிறுவனத்தின் வெற்றி பெற்ற மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய சந்தையில் மீண்டும் நல்ல வரவேற்பை பொலேரோ பெற்றிருக்கிறது.

மஹேந்திரா நிறுவனம் பொலேரோ பவர் பிளஸ் மாடலினை 2016-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் அன்று முதல் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. பொலேரோ பவர் பிளஸ் மாடலில் புதிய mHawkD70 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.



இந்த இன்ஜின் முந்தைய மாடலில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜினை விட 13 சதவிகிதம் கூடுதல் செயல்திறன் மற்றும் ஐந்து சதவிகித்ம வரை எரிபொருள் சிக்கனம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. mHawkD70 இன்ஜின் 1.5 லிட்டர், 3 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆகும். இது 70 ஹெச்.பி. பவர் மற்றும் 195 என்எம் டார்கியூ கொண்டிருக்கிறது. 

இக்குசன் பொலேரோ பவர் பிளஸ் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (DIS), வாய்ஸ் மெசேஜிங் சிஸ்டம், எரிபொருள் மிச்சப்படுத்தும் மைக்ரோ ஹைப்ரிட் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News