செய்திகள்
தீபாவளி

கடந்த ஆண்டு கொரோனாவால் பின்னடைவு- இந்த தீபாவளிக்கு அதிக செலவு செய்ய மக்கள் திட்டம்

Published On 2021-09-14 09:29 GMT   |   Update On 2021-09-14 09:29 GMT
2020-ம் ஆண்டு தீபாவளியின்போது 17 சதவீதம் மட்டுமே கூடுதல் செலவு செய்து இருந்தார்கள். இந்த ஆண்டு அது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த பண்டிகைகளுக்கும் இல்லாத அளவுக்கு மக்கள் தீபாவளி பண்டிகைக்கு அதிகமாக செலவிடுவது வழக்கம். நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகையாகவும் தீபாவளி உள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்தது. இதனால் தீபாவளி கொண்டாட்டம் பெரிய அளவில் நடைபெறவில்லை. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் எளிமையான முறையிலேயே மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தீபாவளி வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகமாக செலவு செய்யப்போவதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக சமூக அமைப்பு ஒன்று மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் 43 சதவீத மக்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகமாக செலவு செய்யப்போவதாக தெரிவித்தனர். 2020-ம் ஆண்டு தீபாவளியின்போது 17 சதவீதம் மட்டுமே கூடுதல் செலவு செய்து இருந்தார்கள்.

இந்த ஆண்டு அது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News