செய்திகள்
(துப்பாக்கிச்சூடு) கோப்புப்படம்

பணம் கேட்டபோது தகராறு: ‘ஓலா’ கார் டிரைவரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்

Published On 2020-02-10 05:16 GMT   |   Update On 2020-02-10 05:16 GMT
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பணத்தகராறில் ஓலா கார் டிரைவரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
பரேலி:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் வினய்சுக்லா. ‘ஓலா’ கார் டிரைவர்.

இவர் கடந்த 2-ந்தேதி ஷாஜகான்பூர் நகரின் புறநகர் பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களின் பட்டியலை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ஷாஜகான்பூரை சேர்ந்த ராணுவ வீரர் ஆதித்ய பால் என்பவர் கடைசியாக வினய் சுக்லாவின் காரில் சவாரிக்கு பதிவு செய்து சென்றது தெரிய வந்தது. அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் தேடிச் சென்றனர். அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதனால் சந்தேகம் வலுத்ததால் அவரை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

ஆதித்யபால் அரியானா மாநிலம் பின்ஜோரில் சி.ஆர்.பி.எப். பட்டாலியனில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று லக்னோவில் இருந்து பாரபங்கி பகுதிக்கு வினய் சுக்லா காரில் சவாரி சென்றுள்ளார்.

பின்னர் பாரபங்கில் இருந்து ஷாஜகான்பூருக்கு சென்றுள்ளார். இதற்காக சவாரி தொகையாக ரூ.2 ஆயிரத்து 700 பேசி உள்ளார். முன் தொகையாக ரூ.1,500 கொடுக்க வேண்டும் என்று வினய் சுக்லா கேட்டுள்ளார். அதற்கு ஆதித்யாபால் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துவதாக கூறினார். அதற்கு வினய் சுக்லா மறுப்பு தெரிவித்ததோடு, பணத்தை ரொக்கமாக என்னிடமே தர வேண்டும் என கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஆதித்யபால் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வினய் சுக்லாவை சுட்டுக்கொலை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News