செய்திகள்
எம்.எஸ். டோனி, ரோகித் சர்மா

ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி: ஐ.பி.எல். போட்டியை நேரில் காண அனுமதி

Published On 2021-09-15 10:40 GMT   |   Update On 2021-09-15 10:40 GMT
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற ஆட்டங்களில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். 2021 சீசன் இந்தியாவில் நடைபெற்றது. கொரோனா 2-வது அலை உச்சநிலையை அடைந்தபோது போட்டி நடைபெற்றதால் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி வைரஸ் தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐ.பி.எல். தொடர் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

மீதமுள்ள ஆட்டங்கள் ஐ.பி.எல். 2021 சீசன் 2-வது பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட இருக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 19-ந்தேதி (ஞாயிறு) நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில் நாளையில் இருந்து போட்டிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுவரை நேரில் சென்று கிரிக்கெட்டை பார்க்க முடியாத ரசிகர்கள் தற்போது நேரில் கண்டுகளிப்பதுடன், அவர்களுக்கு பிடித்தமான அணிக்கு ஆதரவையும் தெரிவிக்கலாம்.

துபாயில் 13 ஆட்டங்களும், ஷார்ஜாவில் 10 ஆட்டங்களும், அபு தாபியில் 8 ஆட்டங்களும் நடைபெற இருக்கின்றன.
Tags:    

Similar News