செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழியை சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள்

தஞ்சை பெரியகோவிலை சுற்றியுள்ள அகழியை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

Published On 2020-01-14 10:11 GMT   |   Update On 2020-01-14 10:11 GMT
கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலை சுற்றியுள்ள அகழியை சுத்தப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
தஞ்சாவூர்:

தஞ்சை பெரியகோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி கலசங்கள் சுத்தப்படுத்தும் பணி, கோபுரங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் தொன்மை மாறாமல் நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. அந்த வகையில் பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழியை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக பெரியகோவிலை சுற்றியுள்ள அகழி கரையில் தற்காலிக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்கள் இந்த அகழியில் விழாதவாறு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலையில் அகழியை சுத்தப்படுத்தி அழகுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பணி மேற்கொண்டனர். அகழியில் உள்ள முட்புதர்கள், குப்பைகளை அகற்றினர். முட்செடிகள் வெட்டி அப்புறப்படுத்தபட்டன. தொடர்ந்து பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

Tags:    

Similar News