செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2021-08-04 14:20 GMT   |   Update On 2021-08-04 14:20 GMT
நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 13-ந்தேதி தொடங்கியது. நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை  இணையதளத்தில் பதிவு செய்யலாம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஆகஸ்ட் 10ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நிறுவனங்களால் பயன்படுத்தப்படுவதால், சுகாதார அறிவியல் இயக்குநரகம் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவு, பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

Tags:    

Similar News