ஆன்மிகம்
வள்ளிமலை கோவில் மூடல்

வள்ளிமலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

Published On 2021-04-28 08:41 GMT   |   Update On 2021-04-28 08:41 GMT
வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் மூடப்பட்டது. மறு உத்தரவு வரும்வரை கோவில் திறக்கப்படாது என அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழக அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது. மேலும் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் உள்ளிட்டவைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் மூடப்பட்டது. மறு உத்தரவு வரும்வரை கோவில் திறக்கப்படாது என அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். கோவில் மூடப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள், கோவில் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதே போல் திருவலத்தில் உள்ள சிறப்பு மிக்க வில்வநாதீஸ்வரர் கோவிலும் மூடப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News