உள்ளூர் செய்திகள்
ஆவடி

பராமரிப்பு பணி- மூர்மார்க்கெட், பட்டாபிராம், ஆவடி மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து

Published On 2022-05-07 09:04 GMT   |   Update On 2022-05-07 09:04 GMT
பராமரிப்பு பணிகள் நடைபெறுவால் இன்று இரவு 7.45 மணி முதல் அதிகாலை 4.45 மணி வரை 6 மின்சார ரெயில்கள் முழுமையாகவும் 5 மின்சார ரெயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை:

பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு விடுகின்றன. அந்த வகையில் அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு நடக்கிறது.

இன்று இரவு 7.45 மணி முதல் அதிகாலை 4.45 மணி வரை பணிகள் நடைபெறுவால் கீழ்கண்ட 6 மின்சார ரெயில்கள் முழுமையாகவும் 5 மின்சார ரெயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இன்று இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லக்கூடிய மின்சார ரெயில்.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து வேளச்சேரிக்கு இன்று இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இரவு 11.55 மணிக்கு ஆவடி புறப்பட்டு செல்லக்கூடிய மின்சார ரெயில்.

வேளச்சேரியில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு கடற்கரை நிலையம் செல்லக்கூடிய மின்சார ரெயில்.

பட்டாபிராமில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு நாளை (8ந் தேதி) அதிகாலை 3.20 மணிக்கு புறப்படக்கூடிய மின்சார ரெயில்.

மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலுக்கு நாளை அதிகாலை 4.15 மணிக்கு புறப்படக்கூடிய மின்சார ரெயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் சைடிங்கிலுக்கு செல்லும் மின்சார ரெயில் ஆவடி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லக்கூடிய ரெயில் ஆவடி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லக்கூடிய ரெயில் ஆவடி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து இன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லக்கூடிய ரெயில் ஆவடி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே ரத்து செய்யப்படுகிறது.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இன்று இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரக்கூடிய ரெயில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ஆவடி இடையே ரத்து செய்யப்படுகிறது.

Tags:    

Similar News