செய்திகள்
கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முக ஸ்டாலின்

3ம் ஆண்டு நினைவு தினம்- கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

Published On 2021-08-07 03:27 GMT   |   Update On 2021-08-07 06:33 GMT
சென்னை கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அவரது சமாதியில், “தமிழ் சமுதாய வளர்ச்சிக்கான இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும், லட்சியங்களையும் வென்று காட்டுவோம்” என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

கருணாநிதி சமாதியில் மரியாதை செலுத்துவதற்காக முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
இன்று காலை மெரினா கடற்கரைக்கு வந்தார். முதலில் அண்ணா நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், பொன்முடி, ஐ.பெரியசாமி, செந்தில்பாலாஜி, பெரிய கருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தொண்டர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து அஞ்சலி செலுத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லம், சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லம், அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் சென்று கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படியுங்கள்...9 கி.மீ. நடந்து சென்று மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்கும் தபால் ஊழியர்

Tags:    

Similar News