செய்திகள்
விழாவில் விருது பெற்ற நல்லாசிரியர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,

14 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

Published On 2020-09-13 01:24 GMT   |   Update On 2020-09-13 01:24 GMT
மதுரை மாவட்டத்தில் 14 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.
மதுரை:

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் இந்த விருதினை 14 ஆசிரியர்கள் பெற்று உள்ளனர். இந்த விருது வழங்கும் விழா, மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவிற்கு அமைச்சர் உதயகுமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார். அதன்படி வன்னிவேலம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியை அய்யம்மாள், மேலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரகுமார், வண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சார்லஸ் இமானுவேல், திருப்பாலை ஸ்ரீராம் நல்லமணி யாதவா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கோப்பெருந்தேவி, தெற்கு வாசல் நாடார் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் நாகநாதன், கி.மீனாட்சிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, தெற்கு வாசல் நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்திபாய் சுவாமியடியாள், மதுரை மாநகராட்சி பைக்காரா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி.

போல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை ரோஜா, ஆழ்வார்புரம் சுப்பராயலு நடுநிலைப்பள்ளி இடை நிலை ஆசிரியை அமலி அனிதா ரெஜினா, திருமங்கலம் பி.கே.என். ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி, அரசரடி ராஜன் வித்யாலயம் நடுநிலைப்பள்ளி இடை நிலை ஆசிரியை சுலைகா பானு, கே.கே.நகர் மகாத்மா மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் விஜயா சுந்தர், மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருணா குமாரி ஆகியோர் விருதுகள் பெற்றனர்.

மேலும் விழாவில் மாநில அளவில் சாதனை படைத்த எம்.எல்.டபிள்யூஏ மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் முத்துசெல்வம், டாக்டர் திருஞானம், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், அலங்காநல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம், ராஜ்குமார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, மாதா, பிதா இவர்களுக்கு இணையாக குறிப்பிடுவது குருவைத்தான். இதைவிட ஆசிரியர்களுக்கு வேறு என்ன சிறப்பு இருக்க முடியும். ஆசிரியர்கள் அறிவை தேடுவதில் மாணவர்களுடன் சக பயணியாக பயணிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப தன்னை தகுதிபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு மாணவன் தவறு செய்தால் அவனது வாழ்க்கை மட்டுமே பாதிக்கப்படும். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் நாட்டின் வளர்ச்சியே பாதிக்கப்படும். எனவே ஆசிரியர்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள் வளர்மதி (மதுரை), முத்தையா (உசிலம்பட்டி), இந்திராணி (திருமங்கலம்), பங்கஜம் (மேலூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News