தொழில்நுட்பம்
வோடபோன்

ரெட் எக்ஸ் சலுகையை இதற்கு மட்டும் பயன்படுத்துங்கள் - வோடபோன் அறிவிப்பு

Published On 2020-05-13 06:31 GMT   |   Update On 2020-05-13 06:31 GMT
வோடபோன் நிறுவனத்தின் ரெட் எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகையை பயனர்கள் இதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெயிட் சலுகைகளை ஒன்றிணைத்து வோடபோன் ரெட் பிராண்டிங்கில் வழங்கி வருகிறது. இதேபோன்று ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் சலுகைகள் மே 11 ஆம் தேதியில் இருந்து வோடபோன் ரெட் பெயரில் வழங்க துவங்கியுள்ளது.

இது துவங்கிய ஒரே நாளில், வோடபோன் நிறுவனம் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் போஸ்ட்பெயிட் சலுகைகளை பயன்படுத்த புதிய வணிக பயன்பாட்டு கொள்கையை அறிவித்துள்ளது. தற்சமயம் வோடபோன் ரெட்எக்ஸ் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது. இதன் விலை மாதம் ரூ. 1099 ஆகும்.

புதிய வணிக பயன்பாட்டு கொள்கையின் படி ரெட்எக்ஸ் சலுகை பயனர்களின் வழக்கமான பயன்பாட்டுக்காக அறிவிக்கப்பட்டது ஆகும். இதனை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோர் கண்டறியப்பட்டால், அவர்களது சலுகை மாற்றப்பட்டு விலை குறைந்த சலுகை ஆக்டிவேட் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.



மேலும் சலுகையை தவறாக பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டவர் ரெட்எக்ஸ் சலுகையை ஆறு மாதங்களுக்குள் தேர்வு செய்தவராக இருந்தால் அவரிடம் இருந்து ரூ. 3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என வோடபோன் தெரிவித்துள்ளது. 
 
வோடபோன் ரெட்எக்ஸ் சலுகையில் அன்லிமிட்டெட் டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

இத்துடன் ஒரு வருடத்திற்கான நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, தேர்வு செய்யப்பட்ட விமான நிலைய லாஞ்ச்கள், தேர்வு செய்யப்பட்ட நாடுகளுக்கு விசேஷ விலையில் ஐஎஸ்டி அழைப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் ரூ. 2999 மதிப்புள்ள ஐரோம் எனும் 7 நாட்கள் சலுகையை வருடத்திற்கு ஒருமுறை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Tags:    

Similar News