தொழில்நுட்பம்
ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட் 4220CH

குறைந்த விலையில் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்த ஜெப்ரானிக்ஸ்

Published On 2021-06-16 10:02 GMT   |   Update On 2021-06-16 10:07 GMT
ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் SpO2, BP மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.


ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜெப் பிட் 4220CH ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் கால் வசதி கொண்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனுடன் இணைத்துவிட்டால், பின் அழைப்பை மேற்கொள்வது மற்றும் ஏற்பது போன்றவற்றை ஸ்மார்ட்வாட்ச் மூலம் செய்துவிடலாம். 

இந்த ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர் கொண்டுள்ளது. இதில் 1.3 இன்ச் TFT கலர் டிஸ்ப்ளே, 100-க்கும் அதிகமான கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் பேஸ்கள், 7 ஸ்போர்ட் மோட்கள், IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, SpO2/ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்டறியும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.



புதிய ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஐஒஎஸ் 9.0 மற்றும் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கும் பின் வெளியான ஒஎஸ் கொண்ட சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பீடோமீட்டர், கலோரி கவுண்ட், டிஸ்டன்ஸ் டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர் என பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 220 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 5 நாட்களுக்கு பேட்டரி பேக்கப், 30 நாட்களுக்கு ஸ்டான்ட்பை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் நிற கேஸ் மற்றும் பிளாக் ஸ்டிராப், சில்வர் கேஸ் மற்றும் வைட் ஸ்டிராப், கேடட் கிரே கேஸ் மற்றும் கேடட் கிரே ஸ்டிராப் கொண்டுள்ளது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 3199 ஆகும். 
Tags:    

Similar News