செய்திகள்
கோப்புபடம்

தொழிலாளர்களுக்கு 13.50 சதவீதம் தீபாவளி போனஸ் - அவிநாசி விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு

Published On 2021-10-07 07:27 GMT   |   Update On 2021-10-07 07:27 GMT
கூலி உயர்வு போராட்டம் தொடர்பாக கூட்டு கமிட்டி எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவிநாசி:

அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கொரோனா பொது முடக்கத்தால் தொழிலாளர்களின் சூழலை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு வழங்கியபடி தீபாவளிக்கு 13.50 சதவீத போனஸ் வழங்குவது, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டிய ஒப்பந்தத்தை 2017, 2020 ஆகிய ஆண்டுகளில் மாற்றி அமைக்காமல் உள்ளதால் கூலி உயர்வு போராட்டம் தொடர்பாக கூட்டு கமிட்டி எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் அவிநாசி, தெக்கலூர், கருவலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News