உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே கூட்டுறவு கடன் சங்க உரக்கிடங்கில் கலெக்டர் ஆய்வு

கடலூர் அருகே கூட்டுறவு கடன் சங்க உரக்கிடங்கில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-05-04 12:23 GMT   |   Update On 2022-05-04 12:23 GMT
கடலூர் அருகே இன்று காலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் உரக்கிடங்கு மற்றும் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு திடீரென்று நேரில் வந்தார்.
கடலூர்:

கடலூர் அருகே திருக்கண்டேஸ்வரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உரக் கிடங்கு மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கி சென்று வருகின்றனர். மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் உரக்கிடங்கு மற்றும் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு திடீரென்று நேரில் வந்தார். பின்னர் உரக்கிடங்கு மற்றும் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளதா? மற்றும் சரியான முறையில் விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படுகிறதா ? என்பதனை கேட்டு அறிந்து ஆய்வு செய்தார் .

மேலும் கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக பயிர் கடன், நகைக்கடன் போன்றவற்றை வழங்கப்பட்டு சரியான முறையில் வசூல் செய்யப்படுகிறதா? என்பதனை அரசு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளுக்கு அரசு அறிவித்த திட்டங்கள் மூலம் கடன்கள் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ரேசன் கடையில் கலெக்டர் பாலசுப்ரமணியம் நேரில் சென்று இருப்பு உள்ள பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொது மக்களுக்கு உணவு பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா? என்பதையும் பார்வையிட்டார்.

முன்னதாக நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு கடையை கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீர் ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? ஏதேனும் உரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதனையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், கடலூர் சரக துணை பதிவாளர் துரைசாமி, டான்பெட் மண்டல மேலாளர் சுரேஷ் குப்தா, கூட்டுறவு சார் பதிவாளர்கள் ராகனி, ராஜமுத்து, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பொறுப்பு ரவிச்சந்திரன் வேளாண்மை துறை இயக்குனர் ஜெயகுமார்உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) நடன சபாபதி, அண்ணாகிராமம் உதவி இயக்குனர் சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News