செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 705 கன அடியாக சரிவு

Published On 2020-11-13 08:24 GMT   |   Update On 2020-11-13 08:24 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 552 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 5 ஆயிரத்து 705 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரத்து 552 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 5 ஆயிரத்து 705 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 94.42 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 93.90 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்காத பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News