ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்யுவி500

இணையத்தில் லீக் ஆன எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்

Published On 2020-09-29 11:35 GMT   |   Update On 2020-09-29 11:35 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் உள்ள ஏழு ஸ்லாட் கிரில் மற்றும் பெரிய பம்ப்பர் புரோடக்ஷன் மாடலில் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த எஸ்யுவி மாடலில் எல் வடிவ எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன.

இத்துடன் பிளஷ்-பிட் டோர் ஹேன்டிள்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. காரின் உள்புறம் பற்றி அதிக விவரங்கள் இல்லை. எனினும், இதன் டேஷ்போர்டு புது வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. இவைதவிர புதிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.



புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் 2.0 லிட்டர் எம்ஸ்டேலியன் டி-ஜிடிஐ டர்போசார்ஜ் செய்யப்பட்ட, 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இது 187 பிஹெச்பி, 380 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 185 பிஹெச்பி வழங்கும் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் ஏடபிள்யூடி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய எக்ஸ்யுவி500 மாடல் ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டார் மற்றும் டாடா ஹேரியர் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News