செய்திகள்
மழை

கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை

Published On 2021-10-13 08:25 GMT   |   Update On 2021-10-13 08:25 GMT
கூத்தாநல்லூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை அறுவடை பணிகள் பாதிப்பு அடைந்தது.
கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானிலையில் ஒரே நிலைப்பாடு இருந்து வருகிறது. நேற்று 5-வது நாளாக காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் சுட்டெரித்தது. இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், வடபாதிமங்கலம், கோரையாறு, வேளுக்குடி, நாகங்குடி, பண்டுதக்குடி, பழையனூர், சித்தனங்குடி, பூந்தாழங்குடி, கீழமணலி, கார்நாதன்கோவில், திருராமேஸ்வரம், ராமநாதபுரம், ஓகைப்பேரையூர், விழல்கோட்டகம், அதங்குடி, வெள்ளக்குடி, வாழச்சேரி, மரக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழையாக பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும் வயல்களிலும் சாலைகளிலும் மழை தண்ணீர் தேங்கி நின்றது.

கூத்தாநல்லூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை அறுவடை பணிகள் பாதிப்பு அடைந்தது. மழை மற்றும் காற்றால் குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. கூத்தாநல்லூர் பகுதிகளில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும் இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடப்பதாக அந்த பகுதி கால்நடை வளர்ப்போர் கூறினர்.

இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூத்தாநல்லூர் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு, இரவு முழுவதும் மிகவும் சிரமம் அடைந்து வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Tags:    

Similar News