லைஃப்ஸ்டைல்
அர்த்தமச்சேந்திராசனம்

நீரிழிவு- முதுகு வலி நிவாரணி அர்த்தமச்சேந்திராசனம்

Published On 2021-04-22 02:28 GMT   |   Update On 2021-04-22 02:28 GMT
இந்த ஆசனம் செய்வதால் நீரிழிவு நோய் கட்டுப்படுகிறது. முதுகுவலி குறைகிறது. இடுப்பு பகுதி வாய்வு பிடிப்பு சரியாகிறது. அடிவயிற்று உறுப்புகளுக்கு மசாஜ் செய்வது போன்ற உணர்வு உண்டாகும்.
செய்முறை

விரிப்பில் கல்களை நீட்டி அமரவும். வலது காலை இடது காலின் மேல் அடிப்பகுதியில் மடக்கி வைத்து கொள்ளவும்.

வலது பாதத்தின் விரல்கள் முன்பக்கம் நோக்கியபடி இருக்கட்டும. இடது காலை மடக்கி பாதத்தை புட்டத்துக்கு வலப்புறமாக கொண்டு வரவும். பாதம் தரையை தொட்டுக்கொண்டு இருக்கட்டும்.

இப்போது வலதுகையை இடது முழங்காலுக்கு வெளியே கொண்டு வந்து இடது காலின் பாதத்தை பிடிக்கவும். மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்து நிதானமாக தலையையும் மார்பையும் இடது புறம் திருப்பவும்.

இடது கையை பின்புறம் அதாவது முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று தொடை அல்லது வலது கணுக்கால் பகுதியை பற்றிக்கொள்ளட்டும். இந்த நிலையில் ஆரம்பத்தில் சில நொடிகள் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பவும்.

சில  நொடிகள் ஓய்வு எடுத்துவிட்டு அப்படியே காலை மாற்றி ஆசனத்தை செய்யவும். பழக பழக நேரத்தை சில நொடிகள் அதிகரித்து கொள்ளவும்.

முழங்கால் வலி, முதுகுத்தண்டு பிரச்சனை உள்ளவர்கள், வயிற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் முடிந்த வரை தவிர்க்கவும். விரும்பினால் தகுந்த யோகா மாஸ்டர் ஆலோசனை பெற்று செய்யலாம்.

பலன்கள்

அடிவயிற்று உறுப்புகளுக்கு மசாஜ் செய்வது போன்ற உணர்வு உண்டாகும். குடலுறுப்புகள் பலப்படும்.

தண்டுவட இணைப்பு ஊக்குவிக்கப்படுகிறது.

செரிமான குறைபாடு சீராகிறது

நீரிழிவு நோய் கட்டுப்படுகிறது. முதுகுவலி குறைகிறது. இடுப்பு பகுதி வாய்வு பிடிப்பு சரியாகிறது.

சிறுநீர்ப் பாதை கோளாறு குணமாகிறது.சிறுநீரகங்கள் தூண்டப்படும்.

விலா எலும்புகள் வலுவடையும்.
Tags:    

Similar News