செய்திகள்
அபிஷேக் சுதேஷ் பட்டை சுட்டுக்கொன்ற எரிக் டியுனர்

அமெரிக்கா: இந்திய மாணவனை சுட்டுக்கொன்ற கொலையாளி போலீசில் சரண்

Published On 2019-12-02 13:02 GMT   |   Update On 2019-12-02 13:02 GMT
அமெரிக்காவில் இந்திய மாணவனை சுட்டுக்கொன்ற கொலையாளி போலீசில் சரண் அடைந்தான்.
வாஷிங்டன்:  

கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள குவேம்பு நகரை சேர்ந்தவர் அபிஷேக் சுதேஷ் பட் (25).  மைசூரில் என்ஜினீயரிங் படித்து முடித்த இவர் மேல்படிப்புக்காக ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் அமெரிக்கா சென்றார். 

அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். மேலும், பகுதிநேரமாக அங்குள்ள சாலையோர உணவு விடுதி ஒன்றில் வேலை பார்த்தும் வந்தார். 

கடந்த நவம்பர் 28-ம் தேதி உணவகத்தில் தனது பணியை முடித்துவிட்டு அபிஷேக் சுதேஷ் பட் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அபிஷேக்கை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிசென்றார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.



இச்சம்பவம் அப்பகுதியில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடிவந்தனர். 

இந்நிலையில், அபிஷேக் சுதேஷ் பட்டை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற எரிக் டியுனர்(42) என்ற நபர் போலீசில் சரண் அடைந்துள்ளான். அபிஷேக்கை அவர் கொன்றது ஏன்? என்பது குறித்து சரணடைந்த எரிக்-கிடம் விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News