தொழில்நுட்பம்
விவோ வி17

ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்

Published On 2021-03-17 10:45 GMT   |   Update On 2021-03-17 10:45 GMT
விவோ நிறுவனத்தின் வி சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு புதிய அம்சங்கள் நிறைந்த ஒஎஸ் அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.


விவோ நிறுவனம் தனது வி17 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கி வருகிறது. புது அப்டேட் பன்டச் ஒஎஸ் 11 யுஐ உடன் வழங்கப்படுகிறது. விவோ வி17 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 சார்ந்த பன்டச் ஒஎஸ் 9.2 ஒஎஸ் உடன் 2019 டிசம்பர் வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக இந்தியாவில் மட்டும் இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் இந்த அப்டேட் வழங்கப்படலாம்.

புதிய பன்டச் ஒஎஸ் அப்டேட் அளவில் 3.43 ஜிபியாக இருக்கிறது. இந்த அப்டேட் PD1948F_EX_A6.70.8 எனும் பில்டு நம்பர் கொண்டுள்ளது. விவோ வி17 பயன்படுத்துவோர் புது அப்டேட் மாற்றங்களை ஸ்கிரீன்ஷாட் வடிவில் ட்விட்டரில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். 



சிலர் புது அப்டேட் பிழைகள் நிறைந்துள்ளது என குற்றஞ்சாட்டி வருகின்றனர். எதுவாயினும் புது அப்டேட் வேண்டும் என நினைப்போர் இந்த அப்டேட்டை டவுன்லோட் செய்யலாம். இவ்வாறு செய்ய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சிஸ்டம் அப்டேட் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். 

விவோ வி17 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 8ஜிபி ரேம், 12ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் 48 எம்பி குவாட் கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. முன்னதாக விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News