வழிபாடு
தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த போது எடுத்த படம்.

திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2022-01-20 06:50 GMT   |   Update On 2022-01-20 06:50 GMT
கும்பகோணம் அருகே திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் பிரசித்தி பெற்ற சாரநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதேவி, மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என 5 லெட்சுமிகளுடன் சாரநாதபெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

பல்வேறு சிறப்பு வாய்ந்த சாரநாத பெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில்தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி உபயநாச்சியார்களுடன் சாரநாதபெருமாள் இந்திர விமானம், சூர்யபிரபை, சேஷ வாகனம், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் கோவில் பிரகார புறப்பாடு நடந்தது.

தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதேவி, மகாலட்சுமி ஆகியோருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் சாரநாதபெருமாள் தேரில் எழுந்தருளினார். 9 மணிக்கு தேரோட்டத்தை அரசின் தலைமை கொறடா கோவிசெழியன், மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. ஆகியோர் இணைந்து வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஆசைத்தம்பி, செயல் அலுவலர் கார்த்திகேயன்

மற்றும் உபயதாரர்கள், பட்டாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News