தொழில்நுட்பம்
ரெட்மி டீசர்

புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

Published On 2020-12-11 04:09 GMT   |   Update On 2020-12-11 04:09 GMT
ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியிடப்படுகிறது.

சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு சாப்ட்வேர் அப்டேட் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் பெரும்பாலான ரெட்மி மற்றும் எம்ஐ சாதனங்களுக்கு எம்ஐயுஐ 12 அப்டேட் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன.

தற்சமயம் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை சியோமி நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது.



ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் கொரோனாவைரஸ் ஊரடங்கு அறிவிக்கும் முன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இது தற்சமயம் வரை முதன்மையான நோட் சீரிஸ் மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எம்ஐயுஐ 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியிடப்பட்டது. 

ரெட்மி நோட் 9 ப்ரோ தவிர எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இது சியோமியின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 44,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News