ஆன்மிகம்
குற்றாலநாத சுவாமி கோவில்

குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2019-12-31 06:49 GMT   |   Update On 2019-12-31 06:49 GMT
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 5.20 மணி முதல் 6.20 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழா வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.

விழா நாட்களில் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை, சிறப்பு பூஜைகள், சுவாமி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் வருகிற 5-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம், 8-ந் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.

விழாவில் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.20 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கின்றது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News