வழிபாடு
ஆயிரம் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

Published On 2022-03-24 03:51 GMT   |   Update On 2022-03-24 03:51 GMT
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரைகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவில் திருவிழாவில் பெரிய தேர், சின்னத்தேர் என இரண்டு தேர்களை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக செல்வர்.

இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலின் இந்த ஆண்டு திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் நிகழ்ச்சி வருகிற 29-ந் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News