செய்திகள்
மம்தா பானர்ஜி

பா.ஜனதா அரசு கைது செய்தால் ‘சிறையில் இருந்தும் வெற்றி பெறுவேன்’ - மம்தா

Published On 2020-11-25 19:06 GMT   |   Update On 2020-11-25 19:06 GMT
பா.ஜனதா அரசு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும். சிறையில் இருந்தும் நான் எங்கள் கட்சியை வெற்றிபெறச் செய்வேன் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
பாங்குரா:

294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் பாங்குரா நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசினார். கொரோனா தொற்று காலத்தில் தனது முதல் பொதுக்கூட்டமான இதில் மம்தா கூறியதாவது:-

“பா.ஜ.க., பொய்களின் குவியலே அன்றி, ஒரு அரசியல் கட்சியல்ல. தேர்தல் வரும்போதெல்லாம், நாரடா என்ற ரகசிய ஆய்வு நடவடிக்கை, சாரதா ஊழல் புகார் குறித்து கூறி திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களை மிரட்டுவது அவர்கள் வாடிக்கை. ஆனால் பா.ஜ.க., அதன் அதிகார அமைப்புகள் குறித்து எனக்கு அச்சமில்லை. அவர்களுக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும். சிறையில் இருந்தும் நான் எங்கள் கட்சியை வெற்றிபெறச் செய்வேன்.

பீகாரில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் நடந்துமுடிந்த தேர்தலில் அவர் தனது கட்சியை குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற வைத்தார். மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. வருகிற தேர்தலில் நாங்களே பெரிய வெற்றியுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News