செய்திகள்
கொரோனா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்ட காட்சி.

கொரோனா தடுப்பு பணி-அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை

Published On 2021-06-08 07:53 GMT   |   Update On 2021-06-08 12:59 GMT
கொரோனா தடுப்பு பணி மற்றும் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார்.
திருப்பூர்:

திருப்பூரில் இன்று கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.  

முதலில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர் அங்கு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பஸ்நிலைய பணிகளை பார்வையிட்டார். அதன்பிறகு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று  அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தற்போது நிலைமை எப்படி உள்ளது? தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது? மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன? ,கொரோனா பரிசோதனை, தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்வராஜ், கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News